/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
ADDED : மே 23, 2025 12:35 AM

செஞ்சி, : செஞ்சி அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
செஞ்சி அடுத்த மாதப்பூண்டி ஊராட்சியில் பழங் குடியினர் குடியிருப்பில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதிக்கு குடிநீர் வழங்க 7 இடங்களில் அமைத்த ஆழ்துளை கிணறுகளில் மண் சரிந்து துார்ந்ததால் மின் மோட்டார் பழுதாகி குடிநீர் சப்ளை தடைப்பட்டது.
இதனால், அப்பகுதி மக்கள் விவசாய கிணறுகளில் மின்மோட்டார் இறக்கும்போது தண்ணீர் பிடித்து பயன்படுத்தி வந்தனர்.
சில நாட்களாக தொடர் மழை பெய்ததால் விவசாய நிலங்களில் மின்மோட்டார் இயக்காததால் தண்ணீர் கிடைக்கவில்லை. இதன் காரணமாக அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் நேற்று மதியம் 12:00 மணியளவில் செஞ்சி பி.டி.ஓ., அலுவலகம் எதிரே காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். செஞ்சி சப் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், மண்டல துணை பி.டி.ஓ., கந்தசாமி ஆகியோர் மறியல் செய்தவர்களை சமாதானம் செய்து அலுவலகம் அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
அங்கு பி.டி.ஓ.,க்கள் நடராஜன், பிரபா சங்கர் மற்றும் போலீசார் சமாதானம் பேசி திறந்தவெளி கிணறு அமைத்து தருவதாக உறுதியளித்தனர். மேலும், நேற்று மாலையே பழுதான மின் மோட்டார் சரி செய்யப்பட்டு குடிநீர் விநியோகம் துவங்கியது.