ADDED : மே 30, 2025 11:54 PM
விழுப்புரம் : விழுப்புரத்தில் கால் தவறி கிணற்றில் விழுந்த பெண் இறந்தார்.
விழுப்புரம் சித்தேரிக்கரை அகரம்பாட்டையை சேர்ந்தவர் கருப்பையா மனைவி லட்சுமி, 47; சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட இவருக்கு, இரண்டு கண்களிலும் பார்வை குறைபாடு இருந்தது.
நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டின் அருகில் உள்ள கிணற்றில், கால் தவறி விழுந்தார். இதில், தண்ணீரில் மூழ்கி சம்பவ இடத்திலே இறந்தார்.
விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.