/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பொது கூட்டங்களில் செவிப்பறை கிழிக்கும் ஒலிபெருக்கி செஞ்சியில் காவல்துறை கண்டுகொள்ளுமா? பொது கூட்டங்களில் செவிப்பறை கிழிக்கும் ஒலிபெருக்கி செஞ்சியில் காவல்துறை கண்டுகொள்ளுமா?
பொது கூட்டங்களில் செவிப்பறை கிழிக்கும் ஒலிபெருக்கி செஞ்சியில் காவல்துறை கண்டுகொள்ளுமா?
பொது கூட்டங்களில் செவிப்பறை கிழிக்கும் ஒலிபெருக்கி செஞ்சியில் காவல்துறை கண்டுகொள்ளுமா?
பொது கூட்டங்களில் செவிப்பறை கிழிக்கும் ஒலிபெருக்கி செஞ்சியில் காவல்துறை கண்டுகொள்ளுமா?
ADDED : செப் 01, 2025 11:19 PM
செ ஞ்சியில் அனைத்து அரசியல் கட்சிகளும் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், பிரசாரம் நடத்தும் திடலாக திருவண்ணாமலை சாலையில் இந்தியன் வங்கி எதிரே உள்ள இடம் மாறி விட்டது.
இந்த இடத்தில் இந்தியன் வங்கி, ஸ்டேட் வங்கி, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, ஐ.சி.ஐ. சி.,வங்கி, தனியார் நிதி நிறுவனங்கள், இரண்டு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள், பிரபல நிறுவனத்தின் ரெடிமேட் ஷோரூம் என செஞ்சி நகரின் இதய பகுதியாக உள்ளது. செஞ்சி வழியாக திருவண்ணாமலை, பெங்களூருக்கு பஸ்கள், கார், வேன், லாரிகள் இந்த வழியாக சென்று வருகின்றன. திருவண்ணாமலை செல்வதற்கு பைபாஸ் சாலை இருந்தாலும் பெரும்பாலான வாகனங்கள் அந்த வழியாக செல்வதில்லை.
பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடக்கும் போதும் இதே வழியில் வாகனங்கள் செல்கின்றன. இதை போலீசாரும் தடுப்பதில்லை.
இந்த சாலை சாதாரண நாட்களிலும் நெரிசலாக இருக்கும். பொதுக்கூட்டம் நடத்தும் போது சாலையின் அகலம் மேலும் குறைந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொது மக்கள் நடந்து செல்வதற்கும் வழி கிடைப்பதில்லை.
ஆளும் கட்சி, எதிர் கட்சி என பாகுபாடின்றி பொதுக்கூட்டத்தில் செவிப்பறை கிழிக்கும் அளவிற்கு அதிக ஒலி எழுப்பும் ஸ்பீக்கர் பாக்ஸ்களை பயன்படுத்துகின்றனர்.
இதனால் இங்குள்ள மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் உள் நோயாளிகள், குழந்தைகள் நிம்மதி இழந்து அவதிக்குள்ளாகின்றனர். இதயம் பலவீனமாக உள்ளவர்களுக்கு நெஞ்சுவலி ஏற்படும் அளவிற்கு ஸ்பீக்கர் பாக்ஸ்களின் சத்தம் அதிகமாக உள்ளது.
இதனால், வர்த்தகர்களும், பொதுமக்களும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த இடத்தில் எந்த அரசியல் கட்சியும் பொதுக்கூட்டம் நடத்த காவல் துறை அனுமதி அளிக்கவில்லை.
விழுப்புரம் ரோடு, காந்தி பஜார் , சந்தைமேடு, பீரங்கி மேடு மந்தைவெளியில் இடம் ஒதுக்கினர். இப்போது, பொதுமக்கள் அவதிப்படுவதை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் போலீசார் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலையாக உள்ள திருவண்ணாமலை சாலையில் பொது கூட்டங்களுக்கு அனுமதி அளித்து வருவது பொது மக்கள் மத்தியில் கடும் அதி ருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே இதற்கு நிரந்தர தீர்வு காண காவல்துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.