Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ காவல் நிலையங்களில் மாயமாகும் 'ஏ.சி.,'கள் அதிகாரிகள் கட்டுப்பாடு விதிப்பார்களா?

காவல் நிலையங்களில் மாயமாகும் 'ஏ.சி.,'கள் அதிகாரிகள் கட்டுப்பாடு விதிப்பார்களா?

காவல் நிலையங்களில் மாயமாகும் 'ஏ.சி.,'கள் அதிகாரிகள் கட்டுப்பாடு விதிப்பார்களா?

காவல் நிலையங்களில் மாயமாகும் 'ஏ.சி.,'கள் அதிகாரிகள் கட்டுப்பாடு விதிப்பார்களா?

ADDED : செப் 09, 2025 03:44 AM


Google News
Latest Tamil News
காவல் துறையில் பணிபுரிபர்கள் ஒரே இடத்தில் அதிக நாட்கள் பணி புரிந்தால் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு ஏற்படும் என்பதால் அதிக பட்சம் 3 ஆண்டுகளில் இடமாற்றம் செய்கின்றனர்.

பழைய அதிகாரிகள் மாற்றலாகி சென்றதும் புதிதாக பதவியேற்கும் அதிகாரிகள் பணியில் சேர்ந்த சில மாதங்களில் உள்ளூர் பிரமுகர்களுடன் நெருக்கமாகி விடுகின்றனர்.

இந்த நெருக்கத்தை பயன்படுத்தி அரசியல் பிரமுகர்கள், குவாரி உரிமையாளர்கள், பார் நடத்துபவர்கள், மணல் லாரி உரிமையாளர்கள், பெரிய வர்த்தகர்களிடம் காவல் துறைக்கு தேவை என கூறி பேரிகார்டு, கண்காணிப்பு கேமரா போன்ற பொருட்களை வாங்குகின்றனர். அத்துடன் அலுவலகத்திற்கு தேவை என கூறி ஏ.சி., சேர், மேஜை விரிப்பு, மின்விசிறி என பலவற்றை ஸ்பான்சராக வாங்குகின்றனர்.

சாமர்த்தியம் உள்ள அதிகாரிகள் ஒரே பொருளுக்கு பலரிடம் ஸ்பான்சர் பெற்று காசு பார்ப்பதும் உண்டு. இது போன்று வங்கும் ஏ.சி.,யை அதிகாரிகள் இடமாற்றம் ஆகும் போது, இரவோடு இரவாக கழட்டி எடுத்து சென்று விடுகின்றனர். மீண்டும் அடுத்த அதிகாரி வந்ததும் இதே வேலையை தொடர்கின்றது.

இது போன்று காவல் நிலையங்களில் ஏ.சி., பொருத்துவதற்கும், பொருத்திய ஏ.சி.,.யை கழட்டி எடுத்து செல்வதற்கும் உயரதிகாரிகளிடம் எந்த அனுமதியும் பெறுவதில்லை. இதற்கு முன்புவரை இது போன்று நடந்தால் காதும், காதும் வைத்தது போல் செய்திகள் வெளியே தெரியாமல் இருந்தது.

தற்போது தகவல் தொடர்பு சாதனங்கள் அதிகரித்து விட்ட நிலையில், இது போன்ற செயல்கள் பொதுமக்களிடம் வேகமாக பரவி காவல் துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறது.

எனவே காவல் நிலையங்களில் பொருத்தும் எந்த ஒரு பொருட்களையும் மாற்றலாகி செல்பவர்கள் எடுத்து செல்வதை தடுக்க, அந்தந்த காவல் நிலையத்திற்கு சொந்தமானது என அந்த பொருட்களில் எழுத வேண்டும். காவல் நிலையங்களில் ஸ்டாக் புத்தக பட்டியலில் ஸ்பான்சராக வாங்கும் ஏ.சி., உள்ளிட்ட எல்லா பொருட்களையும் கணக்கில் காட்ட வேண்டும்.

மாற்றலாகி செல்லும் அதிகாரிகள் அடுத்து வரும் அதிகாரிகளிடம் ஸ்டாக் லிஸ்டில் இருக்கும் பட்டியல்படி பொருட்களை ஒப்படைக்கும் வகையில் விதிமுறைகளை ஏற்படுத்த காவல் துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us