/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஸ்கூட்டர் மீது கார் மோதல் மனைவி பலி: கணவர் படுகாயம் ஸ்கூட்டர் மீது கார் மோதல் மனைவி பலி: கணவர் படுகாயம்
ஸ்கூட்டர் மீது கார் மோதல் மனைவி பலி: கணவர் படுகாயம்
ஸ்கூட்டர் மீது கார் மோதல் மனைவி பலி: கணவர் படுகாயம்
ஸ்கூட்டர் மீது கார் மோதல் மனைவி பலி: கணவர் படுகாயம்
ADDED : ஜூன் 07, 2025 02:02 AM
திண்டிவனம் : திண்டிவனம் அருகே ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்தில், பெண் உயிரிழந்தார். அவரது கணவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
திருவள்ளுவர் மாவட்டம், பாப்பான் சத்திரம், ராமர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சம்பத், 45; இவரது மனைவி கல்பனா, 40; இருவரும் மயிலத்தில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க, சென்னையில் இருந்து ஸ்கூட்டரில் மயிலம் வந்தனர். நிகழ்ச்சி முடிந்து மயிலத்தில் இருந்து சென்னை புறப்பட்டனர்.
திண்டிவனம் தாண்டி சென்னை நோக்கி மேல்பாக்கம் அருகே சென்றனர். அப்போது, உறவினரை சந்திப்பதிற்காக, விழுப்புரம் நோக்கி செல்லும் சாலையில் செல்ல யூ டர்ன் செய்த போது, சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் திண்டிவனம் அரச மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலே கல்பனா உயிரிழந்தார். கணவர் சம்பத் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.