Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு வரவேற்பு 

விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு வரவேற்பு 

விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு வரவேற்பு 

விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு வரவேற்பு 

ADDED : ஜூலை 02, 2025 06:50 AM


Google News
Latest Tamil News
திண்டிவனம், : திண்டிவனத்தில் காஞ்சி சங்கரமடம் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.

விழுப்புரம், கன்னிகா பரமேஸ்வரி கோவில் கும்பாபிேஷகத்தில் கலந்து கொள்வதற்காக, காஞ்சி சங்கரமடத்திலிருந்து வந்த விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு நேற்று இரவு 8:30 மணிக்கு, திண்டி வனம் ஆர்யாஸ் ஓட்டல் எதிரில் வரவேற்பு கொடுக்கபட்டது.

திண்டிவனம் புரோகிதர்கள் சங்க தலைவர் முருக்கேரி சீனுவாச அய்யர், ஸ்ரீராம் பள்ளி தாளாளர் முரளி ரகுராமன் ஆகியோர் தலைமையில், மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் ஸ்ரீராம் பள்ளியின் காமகோடி திரிவேணி வேத பாட சாலை மாணவர்கள், மனவளக்கலை பிரபாகரன் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us