ADDED : ஜூன் 10, 2025 06:36 AM

விழுப்புரம் : விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில், திருக்கல்யாண வைபவம் நடந்தது.
விழுப்புரம் ஜனகவல்லி நாயிகா சமேத வைகுண்டவாச பெருமாள் கோவிலில், கடந்த 2ம் தேதி பிரம்மோற்சவ விழா துவங்கியது. 2ம் தேதி மாலை கருட பிரதிஷ்டை, 3ம் தேதி காலை கருட கொடியேற்றம், 7 ம் தேதி கருட வாகன மகோத்சவம் நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை திருப்பல்லக்கு, இரவு திருக்கல்யாண வைபவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.