/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பக்கத்து மாவட்ட நிர்வாகிகள் தாராளம் எதிர்பார்ப்பில் விழுப்புரம் உடன் பிறப்புகள் பக்கத்து மாவட்ட நிர்வாகிகள் தாராளம் எதிர்பார்ப்பில் விழுப்புரம் உடன் பிறப்புகள்
பக்கத்து மாவட்ட நிர்வாகிகள் தாராளம் எதிர்பார்ப்பில் விழுப்புரம் உடன் பிறப்புகள்
பக்கத்து மாவட்ட நிர்வாகிகள் தாராளம் எதிர்பார்ப்பில் விழுப்புரம் உடன் பிறப்புகள்
பக்கத்து மாவட்ட நிர்வாகிகள் தாராளம் எதிர்பார்ப்பில் விழுப்புரம் உடன் பிறப்புகள்
ADDED : செப் 23, 2025 07:37 AM
கள்ளக்குறிச்சி, அரியலுார் போன்ற மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள், கட்சியினருக்கு சொந்த செலவில் வாகனங்களை வாங்கி கொடுத்து தாராளம் காட்டியுள்ளதால், விழுப்புரம் உள்ளிட்ட பிற மாவட்ட நிர்வாகிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் பணிகளை தி.மு.க., தீவிரப்படுத்தியுள்ளது. தி.மு.க., தலைவரான முதல்வரின் ஆலோசனைப்படி, பல்வேறு தேர்தல் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
அதனுடன், வரும் தேர்தலில் தங்களுக்கான செல்வாக்கையும், சீட்டையும் உறுதிப்படுத்தவும், அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் போட்டி போட்டு பணியா ற்றி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, இப்போதைய சூழலில், துணை முதல்வரிடம் பவர் அதிகரித்துள்ளதால், அவரது இளைஞரணியை புதுப்பித்து, நற்பெயரெடுக்கவும் முக்கிய நிர்வாகிகள் திட்டமிட்டு பணியாற்றி வருகின்றனர்.
அரியலுார் மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கிய புள்ளி தி.மு.க.,விலேயே வித்தியாசமாக கட்சி நிர்வாகிகளுக்கு சொந்த செலவில் வாகனங்களை வாங்கி கொடுத்துள்ளார். சில மாதங்களுக்கு முன் தங்கள் மாவட்ட ஒன்றிய செயலாளர்களுக்கு தனது செலவில் ஜீப் வாங்கிக் கொடுத்து இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளாராம்.
இதன் தொடர்ச்சியாக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முக்கிய நிர்வாகி ஒருவர் 3 மாதங்களுக்கு முன் இளைஞரணி நிர்வாகிகள் 108 பேருக்கு தலா 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஸ்பிளண்டர் பைக்குகளை சொந்த செலவில் வாங்கி கொடுத்துள்ளார். துணை முதல்வர் உதயநிதி கையால், நிர்வாகிகளுக்கு அந்த பைக்குகளை வழங்கியுள்ளதாக, கட்சியினர் பெருமிதமாக கூறுகின்றனர்.
இதனை பார்த்து, வடக்கு மாவட்டத்தில் ஒரு முக்கிய பிரமுகர் 108 பேருக்கு பைக்குகளை கடந்த மாதம் வாங்கி கொடுத்துள்ளாராம். இளைஞரணியினர், இந்த பைக் மூலம் கட்சி பணியாற்றவும், அரசின் சாதனைகளை கொண்டு சேர்க்கவும் பயன்படுத்துவார்கள் என குறிப்பிட்டிருந்தனர்.
இப்படி காரணம் எதுவாக இருந்தாலும், கட்சியின் சீனியர்கள், இளைஞரணியினரை கவனித்து, துணை முதல்வரிடம் நற்பெயரெடுக்கவும், அதன் மூலம் தலைமையில் தங்கள் செல்வாக்கை தக்க வைப்பதற்கே செலவிட்டுள்ளனர் என கட்சியினர் கூறுகின்றனர்.
இதனைப் பார்த்த, விழுப்புரம் மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள், 'எங்கள் மாவட்ட நிர்வாகிகள் சளைத்தவர்கள் இல்லை. தலைமையின் தீவிர விசுவாசியான முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் என முக்கிய பொறுப்பில் உள்ளனர். அவர்களும், இங்குள்ள நிர்வாகிகளுக்கு, தாராளமாக வாகனங்களை வாங்கி கொடுப்பார்கள்' என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.