/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மோசடி வழக்கில் விழுப்புரம் நபர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு மோசடி வழக்கில் விழுப்புரம் நபர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு
மோசடி வழக்கில் விழுப்புரம் நபர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு
மோசடி வழக்கில் விழுப்புரம் நபர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு
மோசடி வழக்கில் விழுப்புரம் நபர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு
ADDED : ஜூன் 12, 2025 06:36 AM
விழுப்புரம்: கலைமகள் சபா நிறுவன மோசடியில் தொடர்புடைய விழுப்புரம் நபரை, தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்ட போலீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
கடந்த 2006ல் கலைமகள் சபா என்ற நிறுவனம், முதலீட்டாளர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு, திரும்ப வழங்காமல் மோசடி செய்ததாக எழுந்த புகார் தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு நடந்து வருகிறது.
நாமக்கல் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், கலைமகள் சபா வழக்கு நிலுவையில் உள்ளது. நாமக்கல் சி.பி.சி.ஐ.டி., போலீசார் இவ்வழக்கை நடத்தி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம், வள்ளலார் நகரை சேர்ந்த சுந்தரம் மகன் பாஸ்கர் மீது, கலைமகள் சபா மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், பாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.
அவர் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டும், அதை நிறைவேற்றுவதற்கு பல்வேறு முயற்சிகளை நீதிமன்றம், போலீசார் மேற்கொண்டபோதும், அவர் தலைமறைவாகவே உள்ளார். இந்நிலையில், நாமக்கல் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம், பாஸ்கரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது. அவர் வரும், 17ம் தேதி காலை 10:30 மணிக்குள், நாமக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.