/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ நிதி நிறுவன மோசடி வழக்கில் விழுப்புரம் நபர் தேடும் குற்றவாளியாக அறிவிப்பு நிதி நிறுவன மோசடி வழக்கில் விழுப்புரம் நபர் தேடும் குற்றவாளியாக அறிவிப்பு
நிதி நிறுவன மோசடி வழக்கில் விழுப்புரம் நபர் தேடும் குற்றவாளியாக அறிவிப்பு
நிதி நிறுவன மோசடி வழக்கில் விழுப்புரம் நபர் தேடும் குற்றவாளியாக அறிவிப்பு
நிதி நிறுவன மோசடி வழக்கில் விழுப்புரம் நபர் தேடும் குற்றவாளியாக அறிவிப்பு
ADDED : செப் 10, 2025 08:56 AM
விழுப்புரம்; கலைமகள் சபா நிதி நிறுவன மோசடி வழக்கில், விழுப்புரத்தை சேர்ந்த நபர், தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து நாமக்கல் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், கலைமகள் சபா நிறுவனத்தில் கடந்த, 1998 ம் ஆண்டில் லட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, விழுப்புரம் வள்ளலார் நகரை சேர்ந்த சுந்தரம் மகன் பாஸ்கர் என்பவர் மீது, நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். பின், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடக்கிறது.
இந்த வழக்கு பதிவு செய்த நாளில் இருந்து தற்போது வரை பாஸ்கர், கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வருகிறார். இதனால், அவருக்கு கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இருந்தும் அவர் ஆஜராகாததால், பாஸ்கரை இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக நாமக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பாஸ்கர், வரும் அக்., 23ம் தேதி காலை 10:30 மணிக்குள் நாமக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.