/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ வீடுகள் ஆக்கிரமிப்பு அகற்றுவதை கைவிட கிராம மக்கள் கோரிக்கை வீடுகள் ஆக்கிரமிப்பு அகற்றுவதை கைவிட கிராம மக்கள் கோரிக்கை
வீடுகள் ஆக்கிரமிப்பு அகற்றுவதை கைவிட கிராம மக்கள் கோரிக்கை
வீடுகள் ஆக்கிரமிப்பு அகற்றுவதை கைவிட கிராம மக்கள் கோரிக்கை
வீடுகள் ஆக்கிரமிப்பு அகற்றுவதை கைவிட கிராம மக்கள் கோரிக்கை
ADDED : மே 28, 2025 07:20 AM
விழுப்புரம் : நீர்நிலை அல்லாத ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றத்தைக் கைவிட வேண்டுமென, திருக்குணம் கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விக்கிரவாண்டி அடுத்த திருக்குணம் ஊராட்சியைச் சேர்ந்த அய்யனார், தங்கராசு, கணபதி தலைமையிலான கிராம மக்கள், நேற்று விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:
திருக்குணம் ஊராட்சியில், நாங்கள் 22 குடும்பத்தினர் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி வசித்து வருகிறோம். இந்நிலையில், நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக தெரிவித்து, கடந்த 2022ம் ஆண்டு ஊராட்சி நிர்வாகம் தரப்பில், வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
அப்போது, எங்களது குடியிருப்புகளையும் அகற்ற முயன்றதால், நாங்கள் தடுத்து நிறுத்தி நீதிமன்றத்தை நாடினோம். அதனைத் தொடர்ந்து, எங்களுக்கு அந்த இடத்தில் மனைப்பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறோம்.
இந்நிலையில், நீர்நிலை புறம்போக்கு பகுதி என குறிப்பிட்ட சர்வே எண் இடத்துடன் சேர்த்து, நீர்நிலை அல்லாத அரசு புறம்போக்கில் உள்ள எங்களது வீடுகளையும் இடித்து அகற்ற, பொதுப்பணித்துறை சார்பில் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எவ்வித நோட்டீசும் வழங்காமல், இன்று நாளை 29ம் தேதி எங்கள் குடியிருப்பு பகுதிகளை அகற்ற முடிவு செய்துள்ளனர். இது குறித்து, அதிகாரிகள் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.