/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பயணிக்க லாயகற்ற சாலை வாகன ஓட்டிகள் அவதி பயணிக்க லாயகற்ற சாலை வாகன ஓட்டிகள் அவதி
பயணிக்க லாயகற்ற சாலை வாகன ஓட்டிகள் அவதி
பயணிக்க லாயகற்ற சாலை வாகன ஓட்டிகள் அவதி
பயணிக்க லாயகற்ற சாலை வாகன ஓட்டிகள் அவதி
ADDED : மே 26, 2025 12:26 AM

விழுப்புரம் : விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் எம்.ஜி.ஆர்., நகர் மெயின் ரோடு குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம் எம்.ஜி.ஆர்., நகரில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள், கடைகள் உள்ளது. இங்குள்ள பொதுமக்கள், வந்து செல்ல எம்.ஜி.ஆர்., நகர் மெயின் ரோட்டை பயன்படுத்துகின்றனர்.
ஆனால், இந்த சாலை ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், சாலையில் பயணிக்க வழியின்றி வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். தற்போது மழையால் பள்ளங்களை மழைநீர் மூடியுள்ளதால், பள்ளங்கள் எங்குள்ளது என தெரியாமல் வாகன ஓட்டிகள் அதில் சிக்கி செல்வதோடு, கீழே விழுந்தும் விபத்துக்குள்ளாகின்றனர்.
பொதுமக்கள், வாகன ஓட்டிகளின் நிலையை கருத்தில் கொண்டு, எம்.ஜி.ஆர்., மெயின் ரோடு சாலையை சீரமைக்க நகராட்சி அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.