ADDED : அக் 03, 2025 11:32 PM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தாலுகா, சங்கீத மங்கலத்தில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
ஈஷா காவேரி கூக்குரல் சார்பில் நடந்த விழாவிற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார் தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வன விரிவாக்க மையத்தின் வனவர் ஜெயபால் கலந்து கொண்டார்.
இதில், பொன்சிவா என்பவரது நிலத்தில் ஏராளமான மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்வில், சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


