/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/திண்டிவனத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்திண்டிவனத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திண்டிவனத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திண்டிவனத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திண்டிவனத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 11, 2024 04:14 AM

திண்டிவனம்: திண்டிவனத்தில் போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழகம் முழுவதும் கடந்த 9 ம் தேதி முதல் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து போக்குவரத்து தொழிற்சங்ங்கங்கள் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கினர்.
இரண்டவாது நாளான நேற்று திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் உள்ள பஸ் நிலையத்தில், நேற்று காலை 11.30 மணியளவில் அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யூ., மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் சங்கம் ஆகியன இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்ற நிர்வாகிகள் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கோஷம் போட்டனர்.
பஸ் நிலையப்பகுதி என்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் ஆர்ப்பாட்டம் செய்தவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.