/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ 24ம் தேதி திருநங்கைகள் குறைகேட்பு முகாம் 24ம் தேதி திருநங்கைகள் குறைகேட்பு முகாம்
24ம் தேதி திருநங்கைகள் குறைகேட்பு முகாம்
24ம் தேதி திருநங்கைகள் குறைகேட்பு முகாம்
24ம் தேதி திருநங்கைகள் குறைகேட்பு முகாம்
ADDED : ஜூன் 12, 2025 10:29 PM
விழுப்புரம்; அனைத்து துறைகளுடன் ஒருங்கிணைந்து திருநங்கைகளுக்கான குறைகேட்பு முகாம் வரும் 24ம் தேதி நடக்கிறது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு:
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து துறைகளுடன் ஒருங்கிணைந்து திருநங்கைகள், திருநம்பிகள் மற்றும் இடைபாலினர்களுக்கு குறைகேட்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் சிறப்பு முகாம் வரும் 24ம் தேதி காலை 11:00 மணியளவில் நடக்கிறது.
முகாமில் திருநங்கைகள் நல வாரியத்தின் அடையாள அட்டை பெறுவதற்கு பதிவு செய்தல். ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அட்டை, முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை மற்றும் ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், பழைய திருநங்கை நல வாரிய அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மற்றும் இணையதள அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் தங்களின் விவரத்தை https://tg.tnsw.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.