Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ செஞ்சி தொகுதி தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு பயிற்சி கூட்டம்

செஞ்சி தொகுதி தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு பயிற்சி கூட்டம்

செஞ்சி தொகுதி தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு பயிற்சி கூட்டம்

செஞ்சி தொகுதி தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு பயிற்சி கூட்டம்

ADDED : ஜூன் 30, 2025 03:13 AM


Google News
Latest Tamil News
செஞ்சி: செஞ்சி தொகுதி தி.மு.க., ஓட்டுசாவடி முகவர்களுக்கு பயிற்சி கூட்டம் நடந்தது.

தி.மு.க., வில் ஓரணியில் தமிழ்நாடு என்கிற செயலி மூலம் புரிய உறுப்பினர் சேர்க்கை நடத்தி வருகின்றனர். இதன்படி செஞ்சி தொகுதியில் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட உள்ள செஞ்சி, மேல்மலையனுார் ஒன்றியம், அனந்தபுரம் நகரத்தை சேர்ந்த ஓட்டுச்சாவடி பாக முகவர்கள், டிஜிட்டல் முகவர்களுக்கான பயிற்சி கூட்டம் செஞ்சியில் நடந்தது.

தொகுதி மேற்பார்வையாளர் கார்த்திகேயன முன்னிலை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர், ஒன்றிய சேர்மன் விஜயகுமார் வரவேற்றார். வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, பயிற்சி கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.

செஞ்சி தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் மணிவண்ணன் உறுப்பினர் சேர்க்கை செயலி குறித்து முகவர்களுக்கு பயிற்சி அளித்தார்.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ., செந்தமிழ் செல்வன், ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், விஜயராகவன், பச்சையப்பன், நகர செயலாளர்கள் கார்த்திக், சம்பத், பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், மாவட்ட கவுன்சிலர்கள் அரங்க ஏழுமலை, அகிலா பார்த்திபன், மகளிர் அணி அமைப்பாளர் திலகவதி விஜயகுமார், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரசன்னா, தொண்டரணி அமைப்பாளர் பாஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us