ADDED : செப் 18, 2025 03:47 AM
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கோலியனுார் கூட்ரோட்டில், இடஒதுக்கீடு போராட்டத்தில் இறந்தவர்களின் நினைவு துாண்களுக்கு பா.ம.க., சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ஆகியோர் தனித்தனியாக தங்களின் ஆதரவாளர்களுடன் வாகனங்களில் ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினர்.
இதனால், காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி மார்க்கம் சென்ற வாகனங்கள் ஜானகிபுரம் - நாகப்பட்டினம் புறவழிச்சாலை வழியாக மாற்றம் செய்யப்பட்டது.
இதேபோன்று, வி.கே.டி., சாலை வாகனங்கள் பனையபுரத்தில் இருந்து முண்டியம் பாக்கம் வழியாக ஜானகிபுரம் - நாகப்பட்டினம் புறவழிச்சாலை வழியாக கும்பகோணம் மார்க்கத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.