/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ விழுப்புரத்தில் நுாற்றாண்டை நோக்கி... தனியார் பள்ளிக்கு இணையாக அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளி விழுப்புரத்தில் நுாற்றாண்டை நோக்கி... தனியார் பள்ளிக்கு இணையாக அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளி
விழுப்புரத்தில் நுாற்றாண்டை நோக்கி... தனியார் பள்ளிக்கு இணையாக அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளி
விழுப்புரத்தில் நுாற்றாண்டை நோக்கி... தனியார் பள்ளிக்கு இணையாக அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளி
விழுப்புரத்தில் நுாற்றாண்டை நோக்கி... தனியார் பள்ளிக்கு இணையாக அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளி

உயர்தொழில் நுட்ப கம்ப்யூட்டர் லேப்
உயர்தொழில் நுட்ப கணினி ஆய்வகம் இயங்குகிறது. 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாணவர்களின் கற்றலை மேம்படுத்த, இணைய வசதிகளுடன் கூடிய 21 கம்ப்யூட்டர்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் உள்ளன.
ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள்
மெய்நிகர் கணினி வழி வகுப்பறைகள் (ஸ்மார்ட் விர்சுவல் கிளாஸ்) கொண்ட தனி சிறப்புகொண்ட பள்ளியாக உள்ளது. 6 முதல் பிளஸ் 2 வரை மாணவிகளின் கற்றலை மேம்படுத்த, தமிழ்நாடு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தால் இந்த வகுப்பறைகள் செயல்படுத்தப்படுகிறது.
பழமை மாறாத கட்டடம்
இப்பள்ளி வளாகத்தில், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட நுாற்றாண்டைக் கடந்த பழைமையான கட்டடம், மாவட்டத்தின் அடையாளமாகவும், பள்ளிக்கும் சிறப்பும், பெருமையும் சேர்த்து வருகிறது. தொடக்க காலத்தில் இக்கட்டடம் ஆசிரியர் பயற்சி பள்ளியாக இருந்தது. மகளிர் மேல்நிலைப் பள்ளியாக மாறியவுடன், இக்கட்டடம் நுாலக கட்டடமாக மாற்றப்பட்டு, 5,000க்கும் மேற்பட்ட புத்தகங்களுடன், பள்ளியின் நுாலகமாக இயங்கி வருகிறது.
சிறப்பு நுழைவு தேர்வு வகுப்புகள்
இப்பள்ளியில் நீட் தகுதி நுழைவு தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படுகிறது. அதில், ஆண்டு தோறும் 40 மாணவிகள் வரை படித்து வருகின்றனர். ஜே.இ.இ., பயிற்சி, சி.ஏ., பயிற்சியில் 100 மாணவிகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.