/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தடையை மீறி பொங்கல் வைக்க சென்றவர்கள் தடுத்து நிறுத்தம் தடையை மீறி பொங்கல் வைக்க சென்றவர்கள் தடுத்து நிறுத்தம்
தடையை மீறி பொங்கல் வைக்க சென்றவர்கள் தடுத்து நிறுத்தம்
தடையை மீறி பொங்கல் வைக்க சென்றவர்கள் தடுத்து நிறுத்தம்
தடையை மீறி பொங்கல் வைக்க சென்றவர்கள் தடுத்து நிறுத்தம்
ADDED : செப் 18, 2025 03:58 AM

சங்கராபுரம்: மேலப்பட்டு கிராமத்தில் தடையை மீறி பொங்கல் வைக்க சென்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
சங்கராபுரம் அடுத்த மேலப்பட்டு கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மஞ்சப்புத்துார் மேலப்பட்டு பிரிவு சாலையில் புதியதாக முனியப்பன் சிலை வைத்தனர். கடந்த 14ம் தேதி இக்கோவிலில் பொங்கல் வைத்து வழிபட அனுமதி கேட்டனர். பொங்கல் வைக்க குறிப்பிட்ட பாதை வழியாக செல்ல மற்றொரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.
இதனால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால், வருவாய் மற்றும் போலீசார் அனுமதி மறுத்தனர். இதனை கண்டித்து கடந்த 13ம் தேதி சங்கராபுரம் தாலுகா அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., முருகன், திருக்கோவிலுார் டி.எஸ்.பி., பார்த்தீபன், இன்ஸ்பெக்டர் சுமதி பேச்சுவார்த்தை நடத்தினர். இரு நாட்களுக்குள் தீர்வு காண பட்டியலின மக்கள் வலியுறுத்தினர்.
ஆனால், உரிய தீர்வு ஏற்படாததால் நேற்று தடையை மீறி பொங்கல் வைத்து வழிபட, 100க்கும் மேற்பட்டோர் புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதைத் தொடர்ந்து, பட்டியிலன மக்கள் கலைந்து சென்றனர்.