ADDED : மே 28, 2025 11:52 PM
விழுப்புரம்,: விழுப்புரத்தில் மாயமான இளம்பெண் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் அடுத்த புருஷானுாரை சேர்ந்தவர் கலியபெருமாள் மகள் நிவேதா, 20; பி.ஏ., தமிழ் பட்டதாரி. நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியில் சென்ற நிவேதா, மீண்டும் வீடு திரும்பிவரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.