ADDED : ஜூன் 23, 2025 04:56 AM
திண்டிவனம், : திண்டிவனம் அருகே 2.5 ஏக்கர் சவுக்கை தோப்பு தீப்பிடித்து எரிந்து நாசமானது.
திண்டிவனம் அடுத்த வெளியனுார் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான சவுக்கை தோப்பு உள்ளது. இங்கு மின் கசிவு காரணமாக சவுக்கை தோப்பு தீப்பிடித்து எரிய துவங்கியது.
காற்று வீசியதால் பக்கத்தில் இருந்த வேலாயுதம், தசதரன் ஆகியோரின் சவுக்கை தோப்புக்குள் தீ தீரவியது.
தகவலறிந்த திண்டிவனம் தீயணைப்பு வீரர்கள் சிறப்பு நிலைய அலுவலர் சுரேஷ் சேவியர் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் கிருஷ்ணமூர்த்தியின் அரை ஏக்கர், வேலாயுதத்தின் அரை ஏக்கர், தசதரன் என்பவரின் 1.5 ஏக்கர் சவுக்கை எரிந்து நாசமானது.