/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ 'தினமலர்' நடத்தும் 'வித்யாரம்பம்' நிகழ்ச்சி விழுப்புரத்தில் வரும் அக்., 2ம் தேதி நடக்கிறது 'தினமலர்' நடத்தும் 'வித்யாரம்பம்' நிகழ்ச்சி விழுப்புரத்தில் வரும் அக்., 2ம் தேதி நடக்கிறது
'தினமலர்' நடத்தும் 'வித்யாரம்பம்' நிகழ்ச்சி விழுப்புரத்தில் வரும் அக்., 2ம் தேதி நடக்கிறது
'தினமலர்' நடத்தும் 'வித்யாரம்பம்' நிகழ்ச்சி விழுப்புரத்தில் வரும் அக்., 2ம் தேதி நடக்கிறது
'தினமலர்' நடத்தும் 'வித்யாரம்பம்' நிகழ்ச்சி விழுப்புரத்தில் வரும் அக்., 2ம் தேதி நடக்கிறது
ADDED : செப் 20, 2025 07:02 AM

விழுப்புரம் : 'தினமலர்' நாளிதழ் மற்றும் விழுப்புரம் சரஸ்வதி சென்ட்ரல் சி.பி.எஸ்.இ., பள்ளி இணைந்து நடத் தும், குழந்தைகளுக்கான 'அ, ஆ' எழுதும்'வித்யாரம்பம்' நிகழ்ச்சி, வரும் அக்., 2ம் தேதி நடக்கிறது.
'தினமலர்' மாணவர் பதிப்பு பட்டம் மற்றும் விழுப்புரம் சரஸ்வதி சென்ட்ரல் சி.பி.எஸ்.இ., பள்ளி இணைந்து, கல்வி சாலைக்குள் அடியெடுத்து வைக்க காத்திருக்கும் இளந்தளிர்கள், சரஸ்வதி தேவியின் அருள்பெற, விஜயதசமி திருநாளில், 'அரிச்சுவடி ஆரம்பம்' எனும் 'வித்யாரம்பம்' நிகழ்ச்சியை நடத்துகிறது.
கல்வியில் சாதனை படைத்து பல்வேறு துறைகளில் மாவட்டத்தில் சிறந்து விளங்கும் முக்கிய பிரமுகர்கள் மடியில்,உங்களது செல்ல குழந்தைகளை அமர வைத்துபிஞ்சு விரல்களை பிடித்து 'அரிச்சுவடியை' ஆரம்பித்து, வைக்கும் சிறந்த தருணமிது.
விழுப்புரம், மாம்பழப் பட்டு ரோடு, வ.பாளை யம், சரஸ்வதி சென்ட்ரல் சி.பி.எஸ்.இ., பள்ளி வளாகத்தில் வரும் அக்., 2ம் தேதி வியாழக்கிழமை, காலை 9:00 முதல் 11:00 மணி வரை நடக்கிறது.
நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இலவசம். ஆனால் முன்பதிவு செய்த குழந்தைகள் மட் டுமே பங்கேற்க முடியும்.
தங்களது குழந்தைகள் எழுதும் முதல் எழுத்தின் அழகிய தருணத்தை புகைப்படம் எடுத்து, உடனடியாக புகைப்படத் துடன் கூடிய 'தினமலர்' சான்றிதழ் வழங்கப்படும்.
நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைத்து குழந்தை களுக்கும் விழுப்புரம் சரஸ்வதி சென்ட்ரல் சி.பி.எஸ்.இ., பள்ளி சார்பில் 'ஸ்கூல் கிட்' சிறப்பு பரிசாக வழங்கப்படும்.
கல்வி கோவிலுக்கு அடியெடுத்து வைக்க உங்க செல்ல குட்டீஸ்களை முன்பதிவு செய்து அழைத்து வாருங்கள்.