/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மக்காச்சோளம் வாங்கிக் கொடுத்து தொண்டர்களை குஷிப்படுத்திய 'மாஜி' மக்காச்சோளம் வாங்கிக் கொடுத்து தொண்டர்களை குஷிப்படுத்திய 'மாஜி'
மக்காச்சோளம் வாங்கிக் கொடுத்து தொண்டர்களை குஷிப்படுத்திய 'மாஜி'
மக்காச்சோளம் வாங்கிக் கொடுத்து தொண்டர்களை குஷிப்படுத்திய 'மாஜி'
மக்காச்சோளம் வாங்கிக் கொடுத்து தொண்டர்களை குஷிப்படுத்திய 'மாஜி'
ADDED : செப் 16, 2025 03:10 AM

க டந்த தேர்தலின் போது, தி.மு..க., மாஜி அமைச்சர் மஸ்தான், டீ கடைக்குச் சென்று தொண்டர்களுக்கு டீ போட்டுக் கொடுப்பது, ஓட்டலுக்கு சென்று புரோட்டா போடுவது, தோசை சுடுவது, பஜ்ஜி போடுவது என பரபரப்பை ஏற்படுத்தினார்.
தற்போது சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மீண்டும் பழையபடி பரபரப்பை ஏற்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
திண்டிவனத்தில் அம்மா உணவகம் எதிரில், நேற்று முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் 117வது பிறந்த நாள் விழாவில், பங்கேற்ற மஸ்தான், நிகழ்ச்சி முடிந்ததும், செஞ்சி ரோட்டில் தள்ளுவண்டியில் மக்காச்சோளம் விற்பனை செய்த இடத்திற்கு சென்றார்.
விற்பனை செய்த பெண்ணிடம், மக்காச்சோளம் எவ்வளவு எனக்கேட்டு, பணத்தை கொடுத்துவிட்டு, மக்காச்சோளத்தை முழுதுமாக வாங்கி, தி.மு.க., தொண்டர்களுக்கு கொடுத்து குஷிப்படுத்தினார்.
இதே போல் ஏற்கனவே பனங்கிழக்கு சீசன் சமயத்தில் திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் விற்பனை செய்த பெண்ணிடம் மொத்தமாக வாங்கி, உடன் வந்த தொண்டர்களுக்கு கொடுத்தார் என்பது குறிப்பிடத் தக்கது.