/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்குவதால் மக்கள் அவதி காற்றில் பறந்த கலெக்டர் உத்தரவுசுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்குவதால் மக்கள் அவதி காற்றில் பறந்த கலெக்டர் உத்தரவு
சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்குவதால் மக்கள் அவதி காற்றில் பறந்த கலெக்டர் உத்தரவு
சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்குவதால் மக்கள் அவதி காற்றில் பறந்த கலெக்டர் உத்தரவு
சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்குவதால் மக்கள் அவதி காற்றில் பறந்த கலெக்டர் உத்தரவு
ADDED : ஜன 08, 2024 05:20 AM

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் அதிகளவில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருவெண்ணெய்நல்லுார் - அரசூர், கடலுார் - திருவண்ணாமலை செல்வதற்கான முக்கிய சாலையாகவும், 3 மாவட்டங்களை இணைக்கும் பிரதான சாலையாகவும் உள்ளது. இந்த சாலையில் திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஆலங்குப்பம் ரயில்வே கேட் வழியை சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், ஆலங்குப்பத்தில் இருவழி ரயில் பாதையாக மாற்றப்பட்டதையடுத்து, ரயில் போக்குவரத்து அதிகரிப்பால் ரயில்வே கேட்டை அடிக்கடி மூடும் நிலை ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இதையடுத்து ரயில்வே துறையினரால் ஆலங்குப்பம் கிராமத்தில் 22 ரெடிமேட் பிரிகாஸ்ட் பாக்ஸ்களைக் கொண்டு 90 மீட்டர் துாரத்திற்கு புதியதாக சுரங்கப்பாதை கடந்த 2019ம் ஆண்டில் அமைக்கப்பட்டது.
சுரங்கப்பாதையையொட்டி மலட்டாறு செல்வதால் எந்நேரமும் அங்கு தண்ணீர் வற்றாமல் தேங்கி நிற்கிறது. அதனை சரி செய்ய வேண்டுமென வாகன ஓட்டிகள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர். கலெக்டர் அப்பகுதியை ஆய்வு செய்து தண்ணீர் இறைப்பதற்கு ராட்சத மோட்டர் வைத்து, 24 மணி நேரமும் ஒரு நபர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதை அதிகாரிகள் சில மாதங்களே கடைபிடித்தனர்.
இதையடுத்து மீண்டும் சரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருவதோடு அவ்வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.