/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கருங்கற்கள் கடத்தல் டாரஸ் லாரி பறிமுதல் கருங்கற்கள் கடத்தல் டாரஸ் லாரி பறிமுதல்
கருங்கற்கள் கடத்தல் டாரஸ் லாரி பறிமுதல்
கருங்கற்கள் கடத்தல் டாரஸ் லாரி பறிமுதல்
கருங்கற்கள் கடத்தல் டாரஸ் லாரி பறிமுதல்
ADDED : மே 22, 2025 11:58 PM
வானுார் : வானுார் அருகே கருங்கற்கள் கடத்திச் சென்ற டாரஸ் லாரியை சுங்கத்துறை அதிகாரிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
மயிலம் பகுதியில் இருந்து வானுார் பகுதிக்கு கருங்கற்கள் கடத்தி செல்லப்படுவதாக விழுப்புரம் புவியியல் மற்றும் சுங்கத்துறைக்கு புகார் வந்தது. இதையடுத்து சுங்கத்துறை உதவி புவியியலாளர் சுந்திரகாசன் தலைமையில் அதிகாரிகள் கரசானுார் பஸ் நிறுத்தம் அருகே கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, மயிலம் பகுதியில் இருந்து வானுார் நோக்கி கருங்கற்கள் சக்கையை ஏற்றிச் சென்ற டாரஸ் லாரியை பறிமுதல் செய்து, வானுார் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.