ADDED : மே 13, 2025 12:55 AM

விழுப்புரம் : விழுப்புரம் அரசு ஜவகர் சிறுவர் மன்றத்தில் கோடைகால பயிற்சி நிறைவு விழா நடந்தது.
விழுப்புரம் அரசு ஜவகர் சிறுவர் மன்றத்தில், கோடைகால பயிற்சி கடந்த 1 முதல் 10ம் தேதி வரை நடந்தது. இதில் குரலிசை, நடனம், ஓவியம், சிலம்பம் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
நிறைவு விழாவில், லட்சுமணன் எம்.எல்.ஏ., கலந்துகொண்டு 255க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். சுந்தர் ஸ்கேல் பாலகுருநாதன், சிறப்பு பரிசு வழங்கினார்.
ஏற்பாடுகளை திட்ட அலுவலர் மஞ்சம்மாள் செய்திருந்தார்.
ஆசிரியர்கள் ஹேமா மஞ்சுளா, குணசேகரன், கீதா, சாந்தி மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.