/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கோடைகால கால்பந்து பயிற்சி முகாம் நிறைவு கோடைகால கால்பந்து பயிற்சி முகாம் நிறைவு
கோடைகால கால்பந்து பயிற்சி முகாம் நிறைவு
கோடைகால கால்பந்து பயிற்சி முகாம் நிறைவு
கோடைகால கால்பந்து பயிற்சி முகாம் நிறைவு
ADDED : ஜூன் 04, 2025 12:21 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில் மாஸ்டர் கால்பந்தாட்ட கழகம் சார்பில் 8ம் ஆண்டு கோடைகால கால்பந்து பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது.
விழுப்புரம் ரயில்வே விளையாட்டு மைதானத்தில் நடந்த விழாவிற்கு, முன்னாள் சேர்மன் ஜனகராஜ் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் பர்னபாஸ், ஓய்வு பெற்ற முதுகலை ஆசிரியர் கலியமூர்த்தி முன்னிலை வகித்தனர்.
மாவட்ட கால்பந்தாட்ட கழக நிறுவனர் தண்டபானி வரவேற்றார். பயிற்சி முகாமை நிறைவு செய்த வீரர்கள், வீராங்கனைகளுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இளமுருகன் சான்றிதழ் வழங்கினார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில பொருளாளர் காளிதாஸ், ஜங்சன் லயன்ஸ் சங்கம் தலைவர் கோபு, மாவட்ட கோழிகறி விற்பனையாளர் சங்க தலைவர் செல்வகுமார்.
ஹோஸ்ட் லயன்ஸ் சங்க தலைவர் மீன்ராஜா, மருதம் இலக்கிய அமைப்பு நிறுவனர் ரவிகார்த்திகேயன், ரயில்வே தொழிற்சங்கம் குணசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.