ADDED : மார் 22, 2025 08:57 PM
அவலுார்பேட்டை : வளத்தி அருகே கார் மோதி நடந்த சென்ற பள்ளி மாணவி இறந்தார்.
வளத்தி அடுத்த சண்டிசாட்சி, தோட்டிகுட்டை பகுதியைச் சேர்ந்தவர் முருகன், 51; இவரது மகள் தீபிகா, 12; அண்ணமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர், நீலாம்பூண்டியில் செஞ்சி - சேத்பட் சாலையில் நேற்று காலை 6:30, மணிக்கு , கடைக்கு செல்வதற்காக நடந்து சென்றார். அப்போது சேத்பட் வழியாக வந்த மாருதி ஸ்விப்ட் கார் தீபிகாவின் பின்னால் மோதியதில், தலையில் படுகாயமடைந்த தீபிகா சம்பவ இடத்திலேயே இறந்தார்.
புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.