கிணற்றில் குதித்து மாணவர் தற்கொலை
கிணற்றில் குதித்து மாணவர் தற்கொலை
கிணற்றில் குதித்து மாணவர் தற்கொலை
ADDED : ஜூன் 12, 2025 10:47 PM

வானுார்; கிளியனுாரில் பிளஸ் 1 மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கிளியனுார், காடான்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் ஸ்ரீராமன், 15; கிளியனுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தவர், தனது தாய் மணிமேகலையிடம் இனி நான் பள்ளிக்குச் செல்ல மாட்டேன், எனக்கு பிடிக்கவில்லை எனக்கூறியுள்ளார்.
இந்நிலையில், நள்ளிரவு 12:00 மணிக்கு, மணிமேகலை எழுந்து பார்த்தபோது ஸ்ரீராமனை காணவில்லை. உடன் அப்பகுதியில் தேடிப் பார்த்தனர்.
அப்போது அதே பகுதியில் உள்ள பொது கிணற்றில் ஸ்ரீராமன் உடல் கண்டெடுக்கப்பட்டது.
கிளியனுார் போலீசார் சென்று ஸ்ரீராமன் உடலை மீட்டு, வழக்குப் பதிந்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.