சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்
சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்
சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்
ADDED : மார் 26, 2025 05:38 AM
வானுார் : வானுார் பகுதியில் சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
புதுச்சேரி மாநிலம், சோரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் மகன் கோகிலம், 26; இவருக்கும் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் வரும் ஏப்ரல் 9ம் தேதி திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த வானுார் சமூக நல விரிவாக்க அலுவலர் வீரமணி, ஊர் நல அலுவலர் உலகரசி, கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் கலைவாணி, திண்டிவனம் சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி, வி.ஏ.ஓ., புனிதா உள்ளிட்டோர் சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அதில், சிறுமிக்கு 17 வயது என்பது உறுதியானது. சிறுமியின் பெற்றோருக்கு அறிவுரை வழங்கி, திருமணத்தை நிறுத்தினர். சிறுமியை மீட்டு, விழுப்புரம் குழந்தைகள் நலக்குழுவில் ஒப்படைத்தனர்.