ADDED : செப் 17, 2025 12:30 AM

விழுப்புரம்; விழுப்புரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது.
முகாமிற்கு, நகர்மன்ற சேர்மன் தமிழ்செல்வி பிரபு தலைமை தாங்கினார். நகராட்சி கமிஷனர் வசந்தி, முன்னாள் சேர்மன் ஜனகராஜ், நகராட்சி பொறியாளர் புவனேஸ்வரி முன்னிலை வகித்தனர்.
இதில், நகராட்சியின் 32 மற்றும் 34 ஆகிய வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
நகர்மன்ற கவுன்சிலர் வித்யாசங்கரி, பெரியார், வார்டு செயலாளர் தாமரை மணாளன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.