ADDED : செப் 09, 2025 11:46 PM

விழுப்புரம்; விழுப்புரம் அருகே கோலியனுார் ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்டமானடி ஊராட்சியில், அரசு சார்பில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நேற்று நடந்தது.
ஊராட்சி திடலில் நடந்த முகாமை கோலியனுார் ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
விழுப்புரம் தாசில்தார்கள் கனிமொழி, ஆனந்தன், கோலியனுார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகநாதன், கார்த்திகேயன், வட்டார மருத்துவ அலவலர் பிரியா பத்மாசினி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி தலைவர் வீரா ஏழுமலை, துணை தலைவர் ராஜா, ஒன்றிய கவுன்சிலர் காசிநாதன், விழுப்புரம் வருவாய் ஆய்வாளர் கதிர்வேல், நிலஅளவையர் சதீஷ், வி.ஏ.ஓ., வீராசாமி, ஊராட்சி செயலாளர் வெங்கடாச்சலம், ஊராட்சி உதவியாளர் பழனி மற்றும் முக்கிய துறை சார்ந்த அலுவலர்கள், ஊராட்சி உறுப்பினர்கள், பொது மக்கள் பலர் கலந்துகொண்டனர்.
சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. முக்கிய துறை சார்பில் அரங்குகள் அமைத்து, கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு பதிவு செய்து, நடவடிக்கைக்கு பரிந்துரை செய்தனர்.