/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பாடிப்பள்ளம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் பாடிப்பள்ளம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
பாடிப்பள்ளம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
பாடிப்பள்ளம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
பாடிப்பள்ளம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
ADDED : செப் 21, 2025 04:53 AM

செஞ்சி:பாடிப்பள்ளம் ஊராட்சியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை மஸ்தான் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
செஞ்சி ஒன்றியம் பாடி பள்ளம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது. ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். துணை சேர்மன் ஜெயபாலன் முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர் தாட்சாயினி கார்த்திகேயன் வரவேற்றார். மஸ்தான் எம்.எல்.ஏ., முகாமை துவக்கி வைத்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார். கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் ரத்த அழுத்தம், நீரிழிவு, நோய், சர்க்கரை, நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து பெட்டகத்தை வழங்கினார்.
இதில் பாடிப்பள்ளம், தாண்டவசமுத்திரம், தச்சம்பட்டு, ஒதியத்துார் ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினர்.
இதில் தாசில்தார் துரைசெல்வன், பி.டி.ஓ.,க்கள் நடராஜன், பிரபாசங்கர், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, ஒன்றிய கவுன்சிலர் சத்யா கார்த்திகேயன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
ஏ.பி.டி.ஓ., அபிராமி நன்றி கூறினார்.