ADDED : செப் 21, 2025 04:52 AM

மயிலம்: செண்டூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது.
இதில் மஸ்தான் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்து பேசினார். சேர்மன் யோகேஸ்வரி மணிமாறன், பி.டி.ஒ.,க்கள் சிவக்குமார், தாசில்தார் யுவராஜ், ஊராட்சி மன்ற தலைவர் முருகன் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய துணை சேர்மன் புனிதா ராமஜெயம் வரவேற்றார். இதில் வடக்கு மாவட்ட அவை தலைவர் சேகர், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன் துவக்க உரையாற்றினர்.
வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன், மாநில தீர்மானக்குழு உறுப்பினர் சிவா, தொகுதி மருத்துவ அணி துணை அமைப்பாளர் பழனி, மாவட்ட சிறுபான்மை பிரிவு அன்சாரி, ஊராட்சி மன்ற தலைவர் உத்திரமூர்த்தி, ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பாஸ்கர், ஒன்றிய கவுன்சிலர் செல்வக்குமார், தி.மு.க., நிர்வாகிகள் பிரபு, சுப்பரமணி, சாரங்கபாணி, பாலசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.