ADDED : செப் 01, 2025 01:11 AM

திண்டிவனம்: திண்டிவனம் சாணக்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.
பள்ளி தாளாளர் தேவராஜ் தலைமை தாங்கினார். துணை தலைவர் வேல்முருகன், பள்ளி முதல்வர் அருள்மொழி வரவேற்றனர்.
விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, விழுப்புரம் எஸ்.பி., சரவணன் பரிசு வழங்கி பேசினார்.
திண்டிவனம் டவுன் டி.எஸ்.பி.,பிரகாஷ் ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்தார். பள்ளி கொடியை மனவளக்கலை பேராசிரியர் ஆசைத்தம்பி ஏற்றி வைத்தார்.
அரிமா சங்க நிர்வாகிகள் சுந்தரம், சாய்நாத், சஞ்சீவி, சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆசிரியர் ஷாலினி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.