/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ முதல்வர் வருகைக்கு அகற்றிய வேகத் தடைகள் மீண்டும் அமைப்பு முதல்வர் வருகைக்கு அகற்றிய வேகத் தடைகள் மீண்டும் அமைப்பு
முதல்வர் வருகைக்கு அகற்றிய வேகத் தடைகள் மீண்டும் அமைப்பு
முதல்வர் வருகைக்கு அகற்றிய வேகத் தடைகள் மீண்டும் அமைப்பு
முதல்வர் வருகைக்கு அகற்றிய வேகத் தடைகள் மீண்டும் அமைப்பு
ADDED : மார் 20, 2025 04:59 AM

திண்டிவனம்: தினமலர் செய்தி எதிரொலியால், முதல்வர் வருகைக்காக நெடுஞ்சாலையில் அகற்றப்பட்ட வேகத்தடைகள் மீண்டும் அமைக்கப்பட்டது.
திண்டிவனத்தில் கடந்த ஜன., 27 ம் தேதி நடந்த மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். இதற்காக திண்டிவனம் நகர எல்லையான ஆர்யாஸ் ஓட்டல் அருகிலிருந்த விழுப்புரம் சாலை வரையிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் இருந்த வேகத்தடைகள் அகற்றப்பட்டது.
இதேபோல் திண்டிவனத்தில் இருந்து ஜக்காம்பேட்டை வரை உள்ள வேகத்தடைகள் அகற்றப்பட்டது. வேகத்தடைகள் ஒரு மாதங்களாகியும், மீண்டும் அமைக்காததால் பல இடங்களில் விபத்து ஏற்பட்டு வந்தது. இது குறித்த சில தினங்களுக்கு முன், தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக, முதல்வர் வருகைக்காக அகற்றப்பட்டிருந்த இடங்களில் மீண்டும் வேகத்தடைகள் அமைக்கப்பட்டது.