ADDED : செப் 01, 2025 12:58 AM

விழுப்புரம் ': விழுப்புரம் அரசு சட்டக்கல்லுாரியில், மாணவர்களுக்கான சிறப்பு சட்ட விரிவுரை நிகழ்ச்சி நடைபெற்றது.
இரு அமர்வுகளாக நடந்த நிகழ்ச்சியில், முதல் அமர்வில், சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர் ஸ்ரீராம் வெங்கடேன், 'திவால் நிலை மற்றும் திவால்நிலை குறியீடு' எனும் தலைப்பில் பேசினார்.
தொடர்ந்து, ஐகோர்ட் வழக்கறிஞர் அஸ்வின் சண்பாக், 'நிதி சொத்துக்களின் பத்திரமயமாக்கல் மற்றும் மறுகட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு வட்டி அமலாக்க சட்டம், 2002' எனும் தலைப்பில் பேசினார். இதில், அரசு சட்டக்கல்லுாரி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.