Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தர்மாதி பீடம் பற்றிய சிறப்புகள்

தர்மாதி பீடம் பற்றிய சிறப்புகள்

தர்மாதி பீடம் பற்றிய சிறப்புகள்

தர்மாதி பீடம் பற்றிய சிறப்புகள்

ADDED : செப் 05, 2025 08:14 AM


Google News
கூர்மாதீந் திவ்யலோகம் ததநு மணிமயம் மண்டபம் தத்ரசேஷம்

தஸ்மின் தர்மாதி பீடம் ததுபரி கமலம் சாமரக்ராஹிரீஸ்

விஷ்ணும் தேவீர் விபூஷாயுத கணமுரகம் பாதுகே வைநதேயம்

ஸேநேசம் த்வாரபாலாந் குமுத முக்கணாந் விஷ்ணு பக்தாந் ப்ரபத்யே!

இந்த ஸ்லோகம் ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் திருவாராதனத்தின் போது (பொதுவாகவும்) அனுசந்திக்க வேண்டிய முக்கியமான ஸ்லோகம்,

இதன் மூலமாக எம்பெருமான் பரமபதத்தில் எத்தகைய திருமா மண்டபத்தில் எழுந்தருளியிருக்கிறான் என்பதனையும் 'தர்மாதி' என்று போற்றத்தகும் பொன்மயமான பீடத்தின் அருகில் எப்படிப்பட்ட காட்சியைக் காண முடிகிறது என்பதனையும் மிகச் சுருக்கமாக அறிவிக்கிறது.

இதனை 'யோக பீடம்' என்றும், அப்பீடத்தின் அருகேயும், படிப்படியாகவும் க்ரமமாக எழுந்தருளியுள்ள நித்யஸூரிகள், திக்பாலகர்கள். கைங்கர்யம் செய்து கொண்டும் அஞ்சலித்துக் கொண்டுமிருப்பதை ஸ்ரீபாஞ்சராத்ரம் மிக விலக் ஷணமாக எடுத்துரைக்கிறது.

ஸ்ரீபாஷ்யகாரர் தம்முடைய 'நித்யக்ரந்தம்' எனும் நுாலை கடைசியாக அருளிச்செய்தார். இந்த நுாலில் பகவதாராதனம் முக்கியமாக எடுத்துரைக்கப்படுகிறது. அதனுள்ளும் இந்த தர்மாதி யோகபீடம் அழகாகக் காட்டப்படுகிறது.

இதனையெல்லாம் நினைவில் கொண்டு, அதனுள் காட்டியபடி முழுவதுமாகக் காட்டமுயன்று. ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவனுடைய கடாக் ஷத்தால் பூர்த்தியடைந்து இருக்கின்றது.

இத்தர்மாதி பீடத்தில் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவனை எழுந்தருளச் செய்து சேவிக்கும், ஒவ்வொரு அடியவரும் திருவாராதனத்தில் (பூஜையில்) முறையாக எப்படி ஆராதிக்க வேண்டும் என்பதனையும், அதன் பலனையும், உடனே அடைந்து விடுவார்கள்.

இவ்வுலகில் இயங்குகின்ற அனைத்து இயக்கங்களுக்கும் ஆதாரமாக இருக்கின்ற எம்பெருமானை ஸ்ரீபூமா தேவி முதலாக ஸுர்ய மண்டலத்தையும் தாண்டி பரமபதத்தில், நாகபோகத்தில் வீற்றிருக்கும்வரை ஒவ்வொரு ஆவரணத்திலும் உள்ள அஷ்டதிக் பாலகர்கள், அஷ்டதிக் தேவதைகள், அஷ்ட வசுக்கள், நவக்ரஹங்கள், நால் வேதங்களின் மூர்த்திகள், நால் குணங்கள், மும்மூர்த்தீகள், அனந்த கருட விஷ்வக்ஸேனாதி, த்வார பாலகர்கள், ஆழ்வாராசார்யர்கள் என்று அனைத்து பகவத் கைங்கர்ய பரர்களால் சேவிக்கப்படும் எம்பெருமானை, அவர்களோடு ஒருசேர சேவிக்கும் பாக்யம் நமக்கு கிடைக்கின்றது.

இந்த தரிசனத்தால் எத்தகைய பலன்கள் கிடைக்கப்பெறும் என்பதை சொல்லத் தேவையில்லை. நமக்கு உள்ளத்தால். உடலால். பிறப்பால், செயலால் எத்தகைய தோஷங்கள் உள்ளதோ அவையனைத்தும் உடனே விலகிடும். ஞானமும் செல்வமும் வந்தெய்தும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us