/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தெற்கு மாவட்ட தி.மு.க., சாதனை விளக்க பொதுக்கூட்டம் தெற்கு மாவட்ட தி.மு.க., சாதனை விளக்க பொதுக்கூட்டம்
தெற்கு மாவட்ட தி.மு.க., சாதனை விளக்க பொதுக்கூட்டம்
தெற்கு மாவட்ட தி.மு.க., சாதனை விளக்க பொதுக்கூட்டம்
தெற்கு மாவட்ட தி.மு.க., சாதனை விளக்க பொதுக்கூட்டம்
ADDED : ஜூன் 26, 2025 02:29 AM

விழுப்புரம்:' விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றியம் மதுரப்பாக்கம் ஊராட்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா மற்றும் நான்கு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி தலைமை தாங்கினார். அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ரவிதுரை, வேம்பி ரவி, ஒன்றியக்குழு தலைவர் சங்கீதா அரசி முன்னிலை வகித்தனர். தலைமை கழக பேச்சாளர்கள் காசி விஸ்வநாதன், வல்லபராசு சிறப்புரையாற்றினர்.
பொதுக்குழு உறுப்பினர் காடுவெட்டி ஏழுமலை, மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன், இளைஞரணி துணை அமைப்பாளர் பாலாஜி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாரதி, மாவட்ட விவசாய அணி தலைவர் பாபு ஜீவானந்தம், தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் சாம்பசிவம், விவசாய அணி துணை அமைப்பாளர்கள் வெங்கடேசன், பாஸ்கர், ஒன்றிய கவுன்சிலர் மகேஸ்வரி பாஸ்கர், நிர்வாகிகள் ராஜமாணிக்கம், தன்ராஜன், செல்வராஜ் நாகப்பன், கண்ணையன், கிளை செயலாளர்கள் முத்துசாமி, முத்துகிருஷ்ணன், பாலமுருகன், கார்த்திகேயன், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் புஷ்பராஜ், முருகன், சுந்தர், ராஜாமணி, ஜெயக்குமார், தகவல் தொழில்நுட்ப அணி விக்னேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.