திண்டிவனம் அருகே பாம்புகள் மீட்பு
திண்டிவனம் அருகே பாம்புகள் மீட்பு
திண்டிவனம் அருகே பாம்புகள் மீட்பு
ADDED : ஜூன் 01, 2025 12:00 AM
திண்டிவனம்: திண்டிவனம் அருகே இருவேறு வீடுகளில் புகுந்த பாம்புகளை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
திண்டிவனம் திருவள்ளுவர் நகர் அல்லி மலர் வீதியை சேர்ந்தவர் சங்கர். இவரது வீட்டிற்குள் நேற்று காலை சாரை பாம்பு ஒன்று புகுந்தது. தகவலறிந்த திண்டிவனம் தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் மாரிசெல்வம் தலைமையில் சென்று, ஆறு அடி நீளமுள்ள சாரை பாம்பு மீட்டு வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.
இதே போன்று ரெட்டணை மேட்டுத்தெருவில் ரமேஷ் என்பவரின் வீட்டிற்குள் பாம்பு புகுந்துள்ளது. அவர் கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று, நான்கு அடி நீளமுள்ள நல்ல பாம்பை மீட்டு, காப்பு காட்டில் விட்டனர்.