/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ 280 காவல் நிலையங்கள் தரம் உயர்வு பதவி உயர்வு ஏக்கத்தில் எஸ்.ஐ.,க்கள் 280 காவல் நிலையங்கள் தரம் உயர்வு பதவி உயர்வு ஏக்கத்தில் எஸ்.ஐ.,க்கள்
280 காவல் நிலையங்கள் தரம் உயர்வு பதவி உயர்வு ஏக்கத்தில் எஸ்.ஐ.,க்கள்
280 காவல் நிலையங்கள் தரம் உயர்வு பதவி உயர்வு ஏக்கத்தில் எஸ்.ஐ.,க்கள்
280 காவல் நிலையங்கள் தரம் உயர்வு பதவி உயர்வு ஏக்கத்தில் எஸ்.ஐ.,க்கள்
ADDED : ஜூன் 30, 2025 03:18 AM
விழுப்புரம்: முதல்வர் அறிவிப்பு வெளியிட்டும், அமைச்சு ஊழியர்கள் மெத்தனத்தால் 280 போலீஸ் நிலையங்கள் தரம் உயர்த்தப்படும் கோப்பு கிடப்பில் போடப்பட்டு உள்ளதாக, சப்இன்ஸ்பெக்டர்கள் புலம்பி வருகின்றனர்.
தமிழக போலீசில் கடந்த 2011ம் ஆண்டு 1,095 பேர் நேரடி சப் இன்ஸ்பெக்டர்களாக தேர்வு செய்யப்பட்டனர். 2011ம் ஆண்டு பயிற்சி முடித்து, தமிழகத்தின் பல மாவட்டங்களில் பணியில் சேர்ந்து 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் கொரோனா காலத்தில் ஓய்வுபெறும் வயது 60 என உயர்த்தியதாலும், நிர்வாக குளறுபடியால், சப் இன்ஸ்பெக்டர்களுக்கு, இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்குவதில், பல சிக்கல்கள் தொடர்ந்து இருந்து கொண்டே வருகிறது.
இதனை கவனத்தில் கொண்ட தற்போதைய அரசு, சப்இன்ஸ்பெக்டர் நிலையில் உள்ள 280 போலீஸ் நிலையங்களை, இன்ஸ்பெக்டர் நிலைக்கு தரம் உயர்த்த நடவடிக்கை எடுத்தது. கடந்த ஏப்., 29ம் தேதி, தமிழக சட்டசபையில் போலீஸ் மானிய கோரிக்கை விவாதத்தில், தமிழக முதல்வர் பதில் அளித்தபோது, 110 விதியின் கீழ் 27வது அறிவிப்பாக சட்டம், ஒழுங்கை சிறப்பாக பராமரிக்கவும், திறம்பட செயல்பட, அன்றாட அவசர நிலைகளை கையாளும் வகையில் 280 இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டு, சப்இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீஸ் நிலையங்கள், இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலிஸ் நிலையமாக மாற்றப்படும். இதன் மூலம் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யவும், வழக்குகளை விசாரிக்கவும், நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவும், சட்டம், ஒழுங்கு, ஜாதி வகுப்புவாத பிரச்னைகளை கட்டுப்படுத்த முடியும் என அறிவிப்பு வெளியிட்டார்.
இந்த அறிவிப்புடன் வெளியிட்ட போலீசார் பதவி உயர்வு, மகளிர் போலீசார் திருமணத்திற்கு பணம் வழங்குவது போன்ற பல அறிவிப்புகளுக்கு உடனடியாக அரசாணை வெளியிடப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துவிட்டது. ஆனால் 280 இன்ஸ்பெக்டர் பணியிடம் உருவாக்கத்திற்கு மட்டும் அரசாணை வெளியிடவில்லை.
இதனை குறிப்பிட்டு போலீஸ் தலைமையகத்திற்கு பலரும் மனு அனுப்பியும் அதற்கு ஒப்புதல் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அரசாணை வெளியாகவில்லை. பதவி உயர்வு வந்து விடும் என்று நம்பிக்கையாக இருந்த பலரும் அரசாணை வராததால் சேர்வடைந்து மன உளைச்சலில் உள்ளனர்.
பதவி உயர்வு வரும் சமயத்தில் ஏதேனும் தண்டனை கிடைத்தால் பதவி உயர்வு கிடைக்காது. இதனால் நமக்கு ஏன் வம்பு என ஒதுங்கி கொண்டு, கிடைக்கும் விடுப்பை எடுத்து கொண்டு சென்று விடுகின்றனர். இதனால் போலீஸ் நிலையங்களில் அன்றாட பணிகளை கவனிக்க சப்இன்ஸ்பெக்டர்கள் இல்லாத நிலை ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இன்று 30ம் தேதி நடக்கும் சட்டம், ஒழுங்கு கலந்தாய்வு கூட்டத்தில் இதற்கு தீர்வு கிடைக்குமா என சப்இன்ஸ்பெக்டர்கள் ஏக்கத்தில் உள்ளனர்.