/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ரூ.6.55 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்: டி.வி.நல்லுாரில் துவக்கம் ரூ.6.55 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்: டி.வி.நல்லுாரில் துவக்கம்
ரூ.6.55 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்: டி.வி.நல்லுாரில் துவக்கம்
ரூ.6.55 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்: டி.வி.நல்லுாரில் துவக்கம்
ரூ.6.55 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்: டி.வி.நல்லுாரில் துவக்கம்
ADDED : ஜூன் 26, 2025 02:14 AM

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட பகுதியில் ரூ. 6.55 கோடி மதிப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி துவக்க விழா நடந்தது.
திருவெண்ணைநல்லுார் பேரூராட்சி, சிவமங்களாம்பிகை நகர் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டத்தின் கீழ், 6.55 கோடி மதிப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி துவக்க விழா நடந்தது. பேரூராட்சி சேர்மன் அஞ்சுகம் கணேசன், பூமி பூஜையை நடத்தி பணியை துவக்கி வைத்தார்.
நகர செயலாளர் கணேசன், 14 வது வார்டு கவுன்சிலர் செந்தில் முருகன், செயற்பொறியாளர் குப்புசாமி, செயல் அலுவலர் ஷேக் லத்திப், இளநிலை உதவியாளர் பாலமுருகன் மற்றும் அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.
பேரூராட்சி சேர்மன் அஞ்சுகம் கணேசன் கூறுகையில்; மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சுத்திகரிப்பு நிலையம் அமைகிறது. சிவ மங்களாம்பிகை நகர், அய்யனார் கோவில் பகுதி, மழையம்பட்டு சந்து, மாரியம்மன் கோவில் தெரு, அனுமன் தெரு, சுந்தரர் தெரு, கடலுார் சாலை, திருக்கோவிலுார் சாலை உள்ளிட்ட 8 இடங்களில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து அங்கிருந்து கழிவு நீர் சுத்தகரிக்கப்பட்டு நேரடியாக விவசாய பயன்பாட்டிற்காக நீர் அனுப்பப்படும் என கூறினார்.