ADDED : செப் 12, 2025 03:57 AM
விழுப்புரம்: அன்னியூர் அரசு கலை அறிவியல் கல்லுாரியில் பாலின உளவியல் மற்றும் மாணவர் நடத்தை நெறிமுறைகள் குறித்த கருத்தரங்கம் நடந்தது.
கல்லுாரி பொறுப்பு முதல்வர் அசோகன் தலைமை தாங்கினார். பேராசிரியர் பாபு வரவேற்றார்.
பெற்றோர் ஆசிரியர் அமைப்பு தலைவர் அரியபுத்திரன் முன்னிலை வகித்தார்.
பேராசிரியர் சுமதி நோக்கவுரையாற்றினார். விழுப்புரம் அரசு கலைக்கல்லுாரி வரலாற்று துறை பேராசிரியர் ரங்கநாதன், விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மனநலம் மற்றும் மருத்துவ சமூக பணியாளர் அசோக்குமார், அன்னியூர் அரசு மேம்படுத்தப்பட்ட மருத்துவமனை டாக்டர் நிவாஸ் சிறப்புரையாற்றினர்.