Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ துாய்மை பணியாளர்கள் எம்.எல்.ஏ.,வை முற்றுகையிட்டதால் பரபரப்பு

துாய்மை பணியாளர்கள் எம்.எல்.ஏ.,வை முற்றுகையிட்டதால் பரபரப்பு

துாய்மை பணியாளர்கள் எம்.எல்.ஏ.,வை முற்றுகையிட்டதால் பரபரப்பு

துாய்மை பணியாளர்கள் எம்.எல்.ஏ.,வை முற்றுகையிட்டதால் பரபரப்பு

ADDED : செப் 21, 2025 04:56 AM


Google News
Latest Tamil News
திண்டிவனம்: திண்டிவனத்தில் நடந்த நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமில் பங்கேற்ற எம்.எல்.ஏ.,வை துாய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டு கோரிக்கை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், திண்டிவனத்திலுள்ள கோவிந்தசாமி அரசு கலைக்கல்லுாரியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நேற்று நடந்தது.

முகாம் துவக்க விழாவில், மாநில தொழிலாளர் ஆணையர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராமன், செஞ்சி எம்.எல்.ஏ.,மஸ்தான், சப்கலெக்டர் ஆகாஷ், மாவட்ட வருவாய் ஆய்வாளர் அரிதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முகாம் துவக்க விழாவில் பங்கேற்றுவிட்டு மேடையை விட்டு எம்.எல்.ஏ., மஸ்தான் இறங்கினார். அப்போது முகாமில் துாய்மை பணிகளை மேற்கொள்வதற்காக வந்திருந்த ஒலக்கூர் வட்டாரத்தை சேர்ந்த 20க்கு மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் எம்.எல்.ஏ.,வை முற்றுகையிட்டனர்.

அப்போது அவரிடம், 'கடந்த 2021ம் ஆண்டு கொரோனா பாதிப்பின் போது, ஒலக்கூர் வட்டாரத்தில் பணியாற்றிய 275 துாய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த தொகை இதுவரை வழங்கவில்லை. ஊக்கத்தொகை வழங்க வேண்டும்,' என்றனர்.

இதற்கு அவர், சம்பந்தபட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று, ஊக்கத்தொகை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறினார். தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us