பேக்கரியில் ரூ.30 ஆயிரம் திருட்டு
பேக்கரியில் ரூ.30 ஆயிரம் திருட்டு
பேக்கரியில் ரூ.30 ஆயிரம் திருட்டு
ADDED : செப் 22, 2025 02:49 AM
திண்டிவனம்: பேக்கரியில் ரூ.30 ஆயிரம் திருடி சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டிவனம் நேரு வீதியில் பேக்கரி (கேக் கார்னர்) கடை வைத்திருப்பவர் சென்னையை சேர்ந்த முர்ஷித், 35; இவரது கடையில் வேலை செய்யும் ஊழியர்கள், நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் வழக்கம் போல, கடையை மூடிவிட்டு சென்றனர்.
நேற்று அதிகாலை 3:45 மணியளவில் மர்ம ஆசாமி ஒருவர் அந்த கடையின் ஷட்டரை திறந்து உள்ள சென்றுள்ளார். உள்ளே கல்லா பெட்டியில் வைத்திருந்த ரூ.30 ஆயிரத்தை திருடிக்கொண்டு, ஷட்டரை பூட்டிக்கொண்டு சென்றுவிட்டார்.
நேற்று காலை 9:00 மணியளவில் கடை ஊழியர்கள் பார்த்த போது ரூ.30 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து கடையின் உரிமையாளர் முர்ஷித் கொடுத்துள்ள புகாரின் பேரில் திண்டிவனம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.