/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அதிக சோலார் பேனல் பொருத்தும் கிராமத்துக்கு ரூ. 1 கோடி அதிக சோலார் பேனல் பொருத்தும் கிராமத்துக்கு ரூ. 1 கோடி
அதிக சோலார் பேனல் பொருத்தும் கிராமத்துக்கு ரூ. 1 கோடி
அதிக சோலார் பேனல் பொருத்தும் கிராமத்துக்கு ரூ. 1 கோடி
அதிக சோலார் பேனல் பொருத்தும் கிராமத்துக்கு ரூ. 1 கோடி
அரசு மானியம்
வீடுகளில் சோலார் பேனல்கள் பொருத்துவதற்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது. ஒரு கிலோ வாட் உற்பத்தி திறன் கொண்ட சூரிய சக்தி அலகை அமைத்தால் ரூ. 30 ஆயிரம்; 2 கிலோ வாட் அமைப்புக்கு ரூ.60 ஆயிரம்; 3 கிலோ வாட் மற்றும் அதற்கு மேலான அலகுக்கு ரூ.78 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. சூரிய திட்ட பணிகள் முடிவுற்ற, 7 முதல் 30 நாட்களுக்குள் மானிய தொகை பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
வங்கி கடனுதவி
சோலார் பேனல்கள் அமைக்க வங்கிகள் மூலம் உடனடியாக கடனுதவி வழங்கப்படுகிறது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் 6.75 சதவீத மானிய வட்டியில் ரூ.2 லட்சம் வரை கடன் பெற்றுக்கொள்ளலாம். இதனை 10 ஆண்டுகள் எளிய தவணை முறையில் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
இத்திட்டத்தின் மூலம் வீடுகளில் சோலார் பேனல்கள் அமைக்க உரிமையாளர்கள், இணைதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். சூரிய சக்தி தகடுகளை அமைக்க ஏற்ற வகையிலான வீடாக இருக்க வேண்டும். சூரிய சக்தி தகடுகளை அமைக்கும் நிறுவனங்களை நுகர்வோர்களே தேர்வு செய்து கொள்ளலாம்.
மாதிரி கிராமங்கள் தேர்வு
சூரிய சக்தி வீடு இலவச மின்சார திட்டத்தை கிராம புறங்களில் ஊக்குவிக்கும் பொருட்டு மக்கள் தொகை, மின் நுகர்வோர் எண்ணிக்கை போன்ற பலவற்றை அடிப்படையாக கொண்டு, தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், 5 மாதிரி சோலார் கிராமங்கள் கலெக்டரின் மேற்பார்வையில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ரூ. 1 கோடி நிதி
மாதிரி கிராமங்களில் எந்த கிராமத்தில் அதிக எண்ணிக்கையிலான வீடுகளில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளதோ அந்த கிராமத்திற்கு மத்திய அரசின் மூலம் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கப்படுகிறது.