Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ஒரே இரவில் 2 வீடுகளில் கொள்ளை; திண்டிவனத்தில் துணிகரம்

ஒரே இரவில் 2 வீடுகளில் கொள்ளை; திண்டிவனத்தில் துணிகரம்

ஒரே இரவில் 2 வீடுகளில் கொள்ளை; திண்டிவனத்தில் துணிகரம்

ஒரே இரவில் 2 வீடுகளில் கொள்ளை; திண்டிவனத்தில் துணிகரம்

ADDED : ஜன 19, 2024 07:38 AM


Google News
Latest Tamil News
திண்டிவனம் : திண்டிவனத்தில் ஒரே இரவில் 2 வீடுகளில், நகை, பணம் கொள்ளையடித்தது மற்றும் கடையின் பூட்டை உடைத்து திருட முயன்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திண்டிவனம், சண்முகா நகரைச் சேர்ந்தவர் சண்முகம், 38; லோடுமேன். இவர், பொங்கலையொட்டி, கடந்த 16ம் தேதி இரவு மூணாறுக்கு சுற்றுலா சென்றிருந்தார்.

நேற்று காலை சண்முகத்தின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்த அவரது உறவினர்கள் சண்முகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த ரோஷணை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். அதில், வீட்டில் இருந்த 7 சவரன் நகைகள் மற்றும் 3 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளை போனது தெரியவந்தது.

இதேபோல், அருகே உள்ள சிவசக்தி நகரில் விக்னேஷ்வர், 21; என்பவரது வீட்டின் கதவை உடைத்து, பீரோவில் இருந்த 2000 ரூபாயும், இதே பகுதியில் பெட்டிக்கடை வைத்திருக்கும் விருத்தாம்பாள் என்பவரின் கடையை உடைத்து, திருட முயற்சி செய்திருப்பதும் தெரியவந்தது.

ஒரே இரவில் நடந்த கொள்ளை தொடர்பாக ரோஷணை இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு, கைரேகை பிரிவு டி.எஸ்.பி., சோமசுந்தரம் ஆகியோர் சம்பவ இடங்களை பார்வையிட்டனர். மேலும், மோப்ப நாய் ராக்கி வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து ஒரே இரவில் 2 வீடுகளில் கொள்ளை மற்றும் கடையில் நடந்த திருட்டு முயற்சி குறித்து ரோஷணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us