/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கொரோனாவில் இறந்தவர் குடும்பத்திற்கு நிவாரண நிதி கொரோனாவில் இறந்தவர் குடும்பத்திற்கு நிவாரண நிதி
கொரோனாவில் இறந்தவர் குடும்பத்திற்கு நிவாரண நிதி
கொரோனாவில் இறந்தவர் குடும்பத்திற்கு நிவாரண நிதி
கொரோனாவில் இறந்தவர் குடும்பத்திற்கு நிவாரண நிதி
ADDED : மார் 19, 2025 04:18 AM

விழுப்புரம், : கொரோனாவில் இறந்த கூட்டுறவு சங்க விற்பனையாளர் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்பட்டது.
டி.தேவனுார் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க விற்பனையாளர் ஏழுமலை. இவர் கொரோனா தொற்றால் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் 11ம் தேதி இறந்தார்.
அவரது வாரிசு தாரரான மனைவி பாஞ்சாலிக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து, 25 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்பட்டது.
விழுப்புரம் மண்டல இணைப்பதிவாளர் விஜயசக்தி, நிவாரணை தொகைக்கான காசோலையை, பயனாளியிடம் வழங்கினார். துணைப் பதிவாளர், அலுவலக ஊழியர்கள் உடனிருந்தனர்.