/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தனி மனைகளுக்கு வரன்முறை செய்ய பதிவு: கலெக்டர் தகவல் தனி மனைகளுக்கு வரன்முறை செய்ய பதிவு: கலெக்டர் தகவல்
தனி மனைகளுக்கு வரன்முறை செய்ய பதிவு: கலெக்டர் தகவல்
தனி மனைகளுக்கு வரன்முறை செய்ய பதிவு: கலெக்டர் தகவல்
தனி மனைகளுக்கு வரன்முறை செய்ய பதிவு: கலெக்டர் தகவல்
ADDED : ஜூன் 30, 2025 03:13 AM
விழுப்புரம்: அனுமதியற்ற மனைப் பிரிவுகளில் தனிமனைகளை வாங்கியவர்கள், வரன்முறை செய்து கொடுக்க இணைய தளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் 2025-26ம் ஆண்டிற்கான சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் போது, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சரால் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி, தமிழகத்தில் அனுமதியற்ற மனைப் பிரிவுகளில், கடந்த 2916ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதிக்கு முன் அமைக்கப்பட்ட, முன் பதிவு செய்யப்பட்ட தனிமனைகளை வாங்கியவர்களுக்கு, எந்த காலக்கெடுவும் இல்லாமல், மனு பெறப்பட்டு வரன்முறை செய்து கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தனிமனையாக வாங்கிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில், வரும் நாளை 1ம் தேதி முதல் www.onlineppa.tn.gov.in என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.