/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பாதாள சாக்கடை கழிவுநீர் பொதுமக்கள் புகார் பாதாள சாக்கடை கழிவுநீர் பொதுமக்கள் புகார்
பாதாள சாக்கடை கழிவுநீர் பொதுமக்கள் புகார்
பாதாள சாக்கடை கழிவுநீர் பொதுமக்கள் புகார்
பாதாள சாக்கடை கழிவுநீர் பொதுமக்கள் புகார்
ADDED : ஜூன் 12, 2025 12:28 AM
விழுப்புரம்: கீழ்பெரும்பாக்கம் 6வது வார்டு பகுதியில், பாதாள சாக்கடையிலிருந்து கழிவுநீர் வெளியேறி பாதிப்பதாக அப்பகுதி மக்கள் நகராட்சியில் புகார் அளித்துள்ளனர்.
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் 6வது வார்டுக்குட்பட்ட அண்ணாமலை நகர், சன்சிட்டி பகுதியில், அடிக்கடி பாதாள சாக்கடை கழிவு நீர் வெளியேறி, சாலையில் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால், அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் விழுப்புரம் நகராட்சி கமிஷனரை சந்தித்து புகார் தெரிவித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.